வாலாஜாபாத் : ஏகனாம்பேட்டை ராணியம்மன் கோவில் வளாகத்தில், வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வாலாஜாபாத் அடுத்த, ஏகனாம்பேட்டை கிராமத்தில், ராணியம்மன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் உள்ள காலி இடத்தில், சபரி மலை, மேல்மருவத்துார் செல்லும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்தி, உணவு சமைத்து சாப்பிட்டு செல்கின்றனர்.சமீபத்தில், கோவில் காலி இடங்களில், வாகனங்களை நிறுத்த கூடாது என, கயிறு கட்டி தடுப்பு மற்றும் எச்சரிக்கை பதாகை அமைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:ராணியம்மன் கோவில், ஏகனாம்பேட்டை கிராமத்தார் கோவிலாகும். இங்கு, இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதை தடுக்கும் வகையில், கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்; வேறு ஒன்றுமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.