பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திலுள்ள, பேரூராட்சிகள், ஒன்றியங்களில், கொரோனா தொடர்பான தகவல்கள், உதவிகள் வழங்க, கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளன.நாடு முழுவதிலும், ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டுமே, ஒரே நாளில், 28,561 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.தொற்று பரவலில் தமிழக அளவில், இரண்டாவது இடத்திலுள்ள கோவை மாவட்டத்தில், 3,390 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதிலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதையடுத்து, மாவட்டம் முழுவதிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியங்களில், கொரோனா பேரிடர் கால கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளன. இதில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திலும் உள்ளாட்சி அமைப்புகளில் துவங்கப்பட்டுள்ளது.கட்டுப்பாட்டு அறைகளில், 24 மணி நேரமும் உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் பணியில் உள்ளனர். தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, சளி மாதிரி சேகரித்தல், தொற்று பாதித்தோருக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவுதல், அறிவுரை வழங்குதல் என, பல வழிகளில் மக்களுக்கு உதவுகின்றனர். தொற்று பாதித்தோரை தினமும் அழைத்து, உடல்நிலை குறித்து விசாரித்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி 04259 - 229529; ஜமீன் ஊத்துக்குளி 225561; நெகமம் 244130; கிணத்துக்கடவு 242297; சமத்துார் 271588; கோட்டூர் 286978; பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், 224735; வடக்கு ஒன்றியம், 224835 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், ஆனைமலை 04253- -- 282338; வேட்டைக்காரன்புதுார் 282996; ஒடையகுளம் 282963; ஆனைமலை ஒன்றியம் 282238 என்ற எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.