கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே தோக்கமூர் கிராமத்தில், தர்மராஜா கோவில் உள்ளது. ஒரு தரப்பினர், அந்த கோவிலை சுற்றி இரும்பு வேலி அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
மறு தரப்பினர், தங்களின் பொது பயன்பாட்டில் உள்ள இடம் என தெரிவித்து, வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, வேலி அமைப்பதை தடுத்த நிறுத்த வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை நேற்று, சிலர் முற்றுகையிட்டு, தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.நில அளவை பணிகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை வேலி அமைக்கும் வேலைகள் நிறுத்தப்படும் என, தாசில்தார் தெரிவித்தார். அதன்பின், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.