சென்னை : காஞ்சி மடத்தின் சார்பில், ஒவ்வொரு வாரமும் நடக்கும், காஷ்மீரின் பெருமைகளை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 'காஷ்மீரில் ஹிந்து பரிமாணம்' என்ற சொற்பொழிவு இன்று நடக்கிறது.
காஞ்சி மடத்தின் சார்பில், காஷ்மீரின் பெருமைகளை விளக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி, சனிக்கிழமை தோறும் இரவு 7:00 மணிக்கு, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு -டியூப்' சேனலில் ஒளிபரப்பாகிறது. கடந்த ஆண்டு ஆக., 15ல் இந்நிகழ்ச்சி துவங்கியது; ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இன்று மாலை 7:00 மணிக்கு 23வது விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, 'காஷ்மீரில் ஹிந்து பரிமாணம்' என்ற தலைப்பில், அனைத்து இந்திய காஷ்மீர் சமாஜத்தின் தலைவர் ரமேஷ் ரெய்னா சொற்பொழிவு ஆற்றுகிறார்.
நிகழ்ச்சிகளை, குறிப்பிட்ட நாட்களில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின்,
https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA என்ற யு டியூப் சேனலில் பார்க்கலாம். மேலும், kamakoti.tv, Kanchi Kamakoti Facebook, Kanchi Kamakoti YouTube, KanchiMutt Twitter ஆகியவற்றிலும் பார்க்கலாம்.