ரவுடி தியாகு ஹரியானாவில் பிடிபட்டது எப்படி?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 ஜன
2022
02:19
பதிவு செய்த நாள்
ஜன 21,2022 23:24

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, பொய்யாகுளம் ரவுடி தியாகு போலீசில் எவ்வாறு பிடிபட்டார் என, பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.



காஞ்சிபுரத்தில் தொழிலதிபர்களையும், பட்டு சேலை முதலாளிகளையும் மறைந்த ரவுடி ஸ்ரீதர் மிரட்டி ஏராளமான சொத்துக்களை பறித்தார்.கடந்த, 2016ல் ரவுடி ஸ்ரீதர் மறைவுக்குப் பின், இரண்டாம் கட்ட ரவடிகளான தணிகா, தினேஷ், பொய்யாகுளம் தியாகு தலையெடுத்து, பலரையும் மிரட்ட ஆரம்பித்தனர்.இதில், ரவுடி ஸ்ரீதரின் பாணியை பின்பற்றிய, ரவுடி பொய்யாகுளம் தியாகு தொழிலதிபர்களை மிரட்டி வந்தார்.

இவர் மீது, 11 கொலை வழக்கு, 23 கொலை மிரட்டல் உள்ளிட்ட, 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன.குற்ற சரித்திர பதிவேட்டை போலீசார் பராமரித்து வந்தனர். ஜெயிலில் இருந்தபடியே தியாகு சதித்திட்டம் தீட்டி வந்ததால், கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமினில் வெளியே வந்த தியாகு, மீண்டும் தொழிலபதிபர்களை மிரட்டுவதை வழக்கமாக்கினார்; போலீஸ் தேடுவதை அறிந்து தலைமறைவானார். தலைமறைவான ஒரு மாதத்திலேயே செந்தில் என்பவரை, சிலர் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். இந்த வழக்கிலும், தியாகு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை பிடிக்க, காஞ்சிபுரம் எஸ்.பி., சுதாகர் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, தினேஷ், தியாகு, படப்பை குணா ஆகிய மூன்று பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க, காவல் துறை உயர் அதிகாரிகள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரையை நியமித்தனர்.

வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படையினர், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களிலும், தியாகுவை தேடி வந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் பதுங்கியிருந்த தியாகுவை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். நேற்று, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


அதிரடி கைது


பொய்யாகுளம் தியாகுவின் பல்வேறு குற்ற செயல்கள் குறித்து, அவரது தாய்க்கு தெரியும் என்றாலும், அவரிடம் விசாரிப்பதை விடுத்து, தியாகுவுடன் தொடர்பில் இருந்தோரின் மொபைல் போன் உரையாடல்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

ஹரியானாவுக்கு சென்ற தியாகு, உடன் தன் மனைவி சுதா, மகனையும் அழைத்துச் சென்றார். மனைவியின் மொபைல் போன் உரையாடல் மற்றும் உளவு பார்க்க நியமிக்கப்பட்டோர் அளித்த தகவலின்படி, காஞ்சிபுரம் தனிப்படை போலீசார், ஹரியானாவுக்கு சென்று தியாகுவை அதிரடியாக கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கூறியதாவது:ரவுடி தியாகு மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளதால், ஆறு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீதிமன்றம் 'பிடிவாரன்ட்' வழங்கியதால், தியாகுவை தேடி கண்டு பிடித்தோம். அவர் மீதுள்ள வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்குகளை நடத்துவோம். இனிமேல், யாரையாவது தியாகு மிரட்டினால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


ஏர்போர்ட்டில் தியாகுவின் தாய் புலம்பல்


ஹரியானா மாநிலத்தில் இருந்து ரவுடி தியாகுவை, தனிப்படை போலீசார் விமானத்தில் அழைத்து வந்தனர். இந்த தகவல் தெரிந்த தியாகுவின் தாய் பவானி, சென்னை ஏர்போர்ட்டில் நின்றுகொண்டு, தியாகுவை பார்த்து, கதறி அழுது புலம்பினார். அப்போது, 'உன்னை ஊரைவிட்டு போக சொன்னேனேடா... எங்க குடும்பத்துல எல்லார் மேலயும் கேஸ் இருக்கு. 10 வருஷமா என் புள்ளைய சாகடிச்சாங்க...' என, போலீசாரை பார்த்து சத்தமிட்டபடி புலம்பினார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
27-ஜன-202212:39:56 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy ஒரு தவறு செய்து சிறைக்கு போனால் இனி தவறு செய்யக்கூடாது என்கிற எண்ணம் வரவேண்டும். சிறை சென்று வந்த பிறகு தவறு செய்யலாம் என்கிற போது யார் குற்றம்
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
25-ஜன-202213:09:34 IST Report Abuse
ponssasi இவன் மீது இவளவு வழக்குகள் இருந்தும் அவனை ஜாமீனில் விட்ட நீதிமான் யார்?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஜன-202213:10:18 IST Report Abuse
Krishnamurthy Venkatesan நீதிமன்றத்தில் குற்றவாளிகளை கொண்டுவர குற்றவாளிகளுக்காக ஜாமீனுக்கு ஆஜராகும் வழக்குரைஞர்களை பொறுப்பேற்க வைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X