மதகை சேதப்படுத்தாமல் நூதன யுக்தியில் பாசனம்! மானாவாரி நிலத்திலும் அறுவடை கைகூடும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
23:27

ஆர்.கே.பேட்டை : மழையை நம்பி, புன்செய் நிலத்திலும் சாகுபடியை துவங்கியுள்ள விவசாயிகள், ஏரி மதகு திறக்கப்படாத நிலையில், கலங்கல் வழியாக குழாய் மூலம் தண்ணீரை சிக்கனமாக வெளியேற்றி, ஏரி பாசனத்தை தொடர்ந்து வருகின்றனர். நடப்பு பருவத்தில் அறுவடையை வெற்றிகரமாக முடிக்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.



திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின், கடந்த நவ., - டிச., மாதம் பெய்த கனமழையால், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பாசனம் கேள்விக்குறிமழை ஓய்ந்த பிறகும் நீர்நிலைகளுக்கான வரத்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.இதை நம்பி, புன்செய் நிலங்களிலும் பாசன பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலன ஏரிகளுக்கு நீர்வரத்து நின்றால், கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.

இதனால் ஏரி கால்வாய் பாசனத்தை நம்பி பயிரிட்டுள்ள, புன்செய் நிலத்தில் பயிர் செய்துவரும் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர்.ஏரிகளில் தண்ணீர் தேங்கி இருந்தாலும், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்காத புன்செய் நிலங்களில் பாசனம் கேள்விக்குறியாக நின்றது.ஏரி மதகுகளை திறந்தால், ஓரிரு மாதங்களில் தண்ணீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு விடும் என்பதால், மதகுகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஏரிகளில் தண்ணீர் தேங்கி நின்றால், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

கெடுபிடி இல்லை

இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு பாசனம் எளிதாக நடைபெறும் என பெரும்பாலான விவசாயிகள் நம்புகின்றனர்.இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த சந்திரவிலாசபுரம் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த புன்செய் நில விவசாயிகள், சந்திரவிலாசபுரம் ஏரி கலங்கல் மற்றும் அடைக்கப்பட்டுள்ள மதகுகளை திறக்காமல், கலங்கல் பகுதியில் இருந்து குழாய் வழியாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதன் மூலம் வெளியேற்றப்படும் நீர், முழுவதுமாக பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு விடுகிறது. ஏரியில் இருந்து குழாய் மூலமாக வெளியேற்றப்படுவது விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுவதில் எந்தவித தவறும் இல்லை என்பதால், பொதுப்பணி துறை அதிகாரிகளும் இதற்கு எந்தவித கெடுபிடியும் காட்டுவது இல்லை.

250 ஏக்கர் விவசாய நிலம்

அடுத்த மூன்று மாதங்களுக்கு, ஏரி நீர் பாசனம் மேற்கொள்ள முடியும், இதன் மூலம், நடப்பு பருவத்தில் புன்செய் நிலங்களில் நெல் பயிரிட்டுள்ளவர்கள் அறுவடையை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கை பெற்றுள்ளனர்.

சந்திரவிலாசபுரம் ஏரி, 150 ஏக்கர் பரப்பளவில், 13 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம், 250 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்யப்பட்டு வருகிறது.தடுப்புகள் உடைப்பு தடுப்புமேல்மட்டத்தில் தேங்கியுள்ள தண்ணீரை தடுப்பு சுவரையும் தாண்டி வயலுக்கு எடுத்து செல்ல, குழாய் பயன்படுத்தப்படுவதால், கலங்கல் பகுதி சேதப்படுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது. தண்ணீர் அதிகளவில் வெளியேறி வீணாவதும் குறையும். இதே யுக்தியை பயன்படுத்தினால், தடுப்பணைகள் உடைக்கப்படுவதும் தடுக்கப்படும்.எஸ்.துரைசாமி, விவசாயி, சந்திரவிலாசபுரம்.

மதகு சீரமைத்த பின் திறக்கப்படும்

சந்திரவிலாசபுரம் ஏரி தொடர்மழையால் நிரம்பியுள்ளது. தற்போதுவிவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிருக்கு மதகு வழியாக தண்ணீர் திறந்து விட முடியாது. காரணம், ஏரியின் மதகு சேதமடைந்துள்ளதால், மதகுதிறந்தால், ஏரியில் உள்ள தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் சந்திரவிலாசபுரம் ஏரி மதகு சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் உள்ளதால் மதகு சீரமைக்கும் பணி மேற்கொள்ள முடியவில்லை. தண்ணீர்குறைந்ததும் மதகு சீரமைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்படும்.ஜே.கலைவாணன், இளநிலை பொறியாளர், நீர்வளத்துறை, திருத்தணி.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X