அண்ணா நகர் : பட்டாளம், சி.ஆர்.கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தார்.இவர், நேற்று முன்தினம் மதியம், 'யமஹா' இருசக்கர வாகனத்தில் அண்ணா வளைவு எதிரே உள்ள, மேம்பாலத்தில், அண்ணா நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, திடீரென நிலைதடுமாறி, 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். அங்கிருந்தோர் சுரேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த சுரேஷ், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து, அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.