பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபரை கைது செய்த போலீசார், 1,050 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி. குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத், எஸ்.ஐ., தியாகராஜன் மற்றும் போலீசார், குப்புச்சிபுதுார் கால்வாய் அருகே சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கால்வாய் அருகே மறைவான பகுதியில் சோதனையிட்ட போது, 50 கிலோ எடையுள்ள, 21 சாக்கு மூட்டையில், 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.ரேஷன் அரிசி கடத்த முயன்ற, ஆனைமலை அண்ணாநகரை சேர்ந்த மாசாணி என்கிற பஞ்சலிங்கத்தை,27, போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.