சென்னை : சென்னை போக்குவரத்து போலீசார், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஊரடங்கு காரணமாக பேருந்து, விமான நிலையத்தில் இருந்து பயணிக்க, ஆட்டோ மற்றும் டாக்சிகள், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர் சங்கத்தினருடன், கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்போது ப்ரீபெய்டு ஆட்டோ சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது
எழும்பூர் ரயில் நிலையத்தில், தற்போது 10 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்
'அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்' என, ஆட்டோ, டாக்சி சங்கங்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பயணியரை இறக்கிவிட்டு வாகனங்கள் வெறுமையாக திரும்பினால், போலீசார் சோதனை செய்யும் போது, பயணியரின் ரயில் டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும்.
பயணியரை இறக்கிவிட்டு, திரும்பும் போது, காலியாக வருவதால், கட்டணத்தை உயர்த்த ஓட்டுனர்கள் முடிவு செய்துள்ளனர். அதுபற்றி, ஓலோ, உபேர் நிறுவன அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.