உடுமலை;திருப்பூர் மாவட்டத்தின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்-' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.திட்டத்தில், 7ம் கட்டமாக, 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. அவ்வகையில், மானுப்பட்டி விவசாயி ராமநாதன் விளைநிலத்தில், நீர் மருது, குமிழ், தேக்கு உட்பட, 210 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது; தம்பிரான் கோவில் சத்யபால் விளைநிலத்தில், தேக்கு, 60; செம்மரம், 60; குமிழ் 75; மகாகனி 60, சந்தனம், 10 உட்பட 305 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.திட்டத்தின் கீழ், தற்போது வரை, 89 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.