உடுமலை:உடுமலை அருகே விளைநிலங்களில், வலம் வரும் காட்டெருமையை வனத்துக்குள் விரட்ட, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே வனப்பகுதியையொட்டி, விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.இந்நிலையில், உடுமலை அருகே ஜிலோபநாயக்கன்பாளையம், வல்லக்குண்டாபுரம் உட்பட கிராமங்களில், விவசாயம் பிரதானமாக உள்ளது.