215 பேருக்கு கொரோனா பாதிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
215 பேருக்கு கொரோனா பாதிப்பு
Added : ஜன 22, 2022 | |
Advertisement
 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், மூன்று தாலுகாக்களில், 215 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம், லட்சுமிபுரம், டி.கோட்டாம்பட்டி, மகாலிங்கபுரம், நல்லப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, கோமங்கலம்புதுார், சிஞ்சுவாடி, கஞ்சம்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, சூளேஸ்வன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, சமத்துார் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில், மொத்தம், 137 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வால்பாறை தாலுகாவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.கிணத்துக்கடவு தாலுகாவில், நேற்று, 52 பேருக்கு தொற்று பரவல் உறுதியானது. ஆனைமலை தாலுகாவில், கோட்டூர், ஆழியாறு, நா.மூ.சுங்கம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், மஞ்சநாயக்கனுார், காளியாபுரம் உள்பட, 17 பகுதிகளில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தொற்று பாதித்தவர்களுடன் தங்கியிருந்த, 68 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அதிக தொற்று பரவல் ஏற்பட்ட பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X