இன்று மெகா முகாம்; மறக்காம தடுப்பூசி செலுத்துங்க! ஒருவர் கூட விடுபடக்கூடாது என அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
00:04

பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, பொதுமக்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.பொள்ளாச்சி நகரில், 19வது மெகா தடுப்பூசி முகாம், 10 இடங்களிலும், தெற்கு ஒன்றியம், 37, வடக்கு ஒன்றியம், 30, கிணத்துக்கடவு, 50, ஆனைமலை, 48, வால்பாறை, 50 என மொத்தம், 225 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது.


பொதுமக்கள், தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.* வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் அறிக்கையில், 'வால்பாறையில், 19வது மெகா தடுப்பூசி முகாம், இன்று (22ம் தேதி) காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.இதற்காக, வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர், அட்டகட்டி உள்ளிட்ட, 50 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசி செலுத்தி, 273 நாட்களுக்கு பின், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்,' என, தெரிவித்துள்ளார்.உடுமலைதிருப்பூர் மாவட்டத்தில், கோவிட் 19 நோயின் தாக்கம் கடந்த 2 அலைகளின் போதும், அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்களை நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு, மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 19வது கட்ட முகாமாக, இன்று (22ம் தேதி) கோவிட் 19 சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.மாவட்டத்தில், இதுவரை, 20 லட்சத்து, 867 பேருக்கு முதல் தவணை, 13 லட்சத்து 34 ஆயிரத்து, 751 பேருக்கு, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (22ம் தேதி) மொத்தம் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு நபர் கூட, விடுபடாமல், தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாம், 636 நிலையான முகாம்களில், காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பணிக்காக, பல்வேறு துறைகளைச்சேர்ந்த 2,544 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடவுள்ளனர்.மேலும், பூஸ்டர் தடுப்பூசியானது, கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை பெற்று, 9 மாதம் அல்லது 39 வாரமான சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முகாமில், தடுப்பூசி போடப்படும். இதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.-- நிருபர் குழு -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X