உடுமலை:உடுமலை அருகே கோழிக்குட்டை கிராமத்தில், 50 அடி ஆழம் கொண்ட, தண்ணீர் இல்லாத கிணறு உள்ளது. வறண்டு கிடக்கும் கிணறு அருகே, சென்ற, அதே கிராமத்தை சேர்ந்த, முதியவர் துரைசாமி, 70, எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்தார்.இது குறித்து அப்பகுதியைச்சேர்ந்தவர்கள், உடுமலை தீயணைப்பு மீட்பு துறையினருக்கு, தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு சென்ற, தீயணைப்பு வீரர்கள் பலத்த காயமடைந்த, துரைசாமியை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.