சுல்தான்பேட்டை ஒன்றிய கிராமங்களில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கு, தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சுல்தான்பேட்டை ஒன்றியம் வா.சந்திராபுரம், சின்ன வதம்பச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட சின்ன வதம்பச்சேரி, பெரிய வதம்பச்சேரி கிராமங்களில், 15 முதல், 18 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர்கள் சூர்யா, பிரசன்னா ஆகியோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். ஜல்லிப்பட்டி, அப்பநாயக்கன்பட்டி பகுதியில், டாக்டர் ஹாரிஸ் தலைமையில், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.43 பேருக்கு பாதிப்புஇதற்கிடையில், சுல்தான்பேட்டை வட்டாரத்தில், நேற்று ஒரே நாளில், 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மாத்திரைகளை சுகாதாரத்துறையினர் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுத்து வருகின்றனர்.தொற்று பாதித்தவர்கள் வீணாக வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.மெகா முகாம் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 56 மையங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள, 9 ஊராட்சிகள், 3 பேரூராட்சிகள், ஒரு நகராட்சி பகுதிகளில்,இன்று 56 மையங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. முதல் தவணை செலுத்தி, இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும், செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர்கள், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மையங்களில் காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. இம்முகாமில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவற்றுடன் பூஸ்டர் தடுப்பு செய்யும் செலுத்தப்படுகிறது. வியாழன்தோறும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த, தொடர்ந்து சிறப்பு முகாம் நடக்கும்.இருந்தாலும், சனிக்கிழமை நடக்கும் மெகா தடுப்பூசி முகாம்களிலும், முன் களப்பணியாளர்கள், 60 வயது கடந்தவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.