பெ.நா.பாளையம்:தமிழ்நாடு அரசு காலண்டரில் மாணவர்களின் ஓவியங்களை வெளியிட, குறளோவியம் என்ற ஓவியப்போட்டி, தமிழக அரசால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது.இதில், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா பங்கேற்று, மூன்றாம் இடம் பெற்றார்.சென்னையில் நடந்த பரிசளிப்பு விழாவில், மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் கேடயமும், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசளித்தார். பிருந்தா வரைந்த ஓவியமும், இதே பள்ளி பிளஸ் 2 மாணவர் தினகரன் வரைந்த ஓவியமும், தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை நாட்காட்டியில் இடம்பெற்றுள்ளது.பள்ளியின் செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தர், தலைமை ஆசிரியர் பரமசிவம், ஓவிய ஆசிரியர் ராமராஜன் வெற்றி பெற்ற மாணவர், மாணவிக்கு, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.