மேட்டுப்பாளையம்;'தினமலர்' செய்தி எதிரொலியால், மருதூரில் கால்நடை மருந்தகம் கட்டும் பணிகள் துவங்கின.காரமடை அடுத்த மருதூரில், கால்நடை மருந்தகம், பழைய ஊராட்சி கட்டடத்தில் செயல்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால், புதியதாக கால்நடை மருந்தகம் அமைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை, கடந்த 5 மாதங்களுக்கு முன், 40 லட்சம் ரூபாய் செலவில், கால்நடை மருந்தகம் அமைக்க, டெண்டர் விட்டது. டெண்டர் எடுத்தவர், பில்லர் அமைக்க, குழி தோண்டிய நிலையில், கட்டடம் கட்டாமல் அப்படியே விட்டு விட்டார். தினமலரில் இது குறித்து படத்துடன் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக, டெண்டர் எடுத்தவர், பில்லர் அமைக்க குழிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.