கால்நடை மருந்தகம் கட்டும் பணி தொடங்கியது: 'தினமலர்' செய்தி எதிரொலி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கால்நடை மருந்தகம் கட்டும் பணி தொடங்கியது: 'தினமலர்' செய்தி எதிரொலி
Added : ஜன 22, 2022 | |
Advertisement
 
Latest district News

மேட்டுப்பாளையம்;'தினமலர்' செய்தி எதிரொலியால், மருதூரில் கால்நடை மருந்தகம் கட்டும் பணிகள் துவங்கின.காரமடை அடுத்த மருதூரில், கால்நடை மருந்தகம், பழைய ஊராட்சி கட்டடத்தில் செயல்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால், புதியதாக கால்நடை மருந்தகம் அமைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை, கடந்த 5 மாதங்களுக்கு முன், 40 லட்சம் ரூபாய் செலவில், கால்நடை மருந்தகம் அமைக்க, டெண்டர் விட்டது. டெண்டர் எடுத்தவர், பில்லர் அமைக்க, குழி தோண்டிய நிலையில், கட்டடம் கட்டாமல் அப்படியே விட்டு விட்டார். தினமலரில் இது குறித்து படத்துடன் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக, டெண்டர் எடுத்தவர், பில்லர் அமைக்க குழிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X