அன்னூர்:அன்னூர் பேரூராட்சியில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியை துவக்கியுள்ளன. அ.தி.மு.க.,வினர் சிக்கனுடன் உணவு வழங்கினர்.தி.மு.க., சார்பில், 15-வார்டு நிர்வாகிகளிடம், வாக்காளர்களின் மொபைல் எண், ஆதார் எண்ணுடன் எழுதப்பட்ட பட்டியலை, ஒன்றிய நிர்வாகிகள் பெற்றனர். குமாரபாளையத்தில், கட்சி அலுவலகத்தை, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் திறந்து வைத்தார்.அ.தி.மு.க., சார்பில், பேரூராட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அன்னூரில் நடந்தது. கூட்டத்தில், வீடு வீடாக சென்று அ.தி.மு.க.,வின் 10 ஆண்டு சாதனைகளையும், கடந்த 8 மாத தி.மு.க., ஆட்சியின் தோல்விகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.நமது ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோருடைய பட்டியலை தயாரிக்க வேண்டும், என, அறிவுரை வழங்கப்பட்டது. அ.தி.மு.க., தொண்டர்களுக்கு சிக்கன் கிரேவி, இட்லி, புரோட்டா என அசத்தல் விருந்து வழங்கப்பட்டது.