சூலூர்:தென்னைக்கு ஊட்டம் தரும் நுண்ணுாட்ட உரத்தை பெற்று பயனடைய வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.தென்னையில் அதிக மகசூல் பெற, நுண் ணூட்ட உரம் பயன்படுத்த வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. சுல்தான்பேட்டை வேளாண் அலுவலர் குருசாமி, உதவி அலுவலர் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:தென்னைக்கு நுண்ணூட்ட உரம் பயன்படுத்துவதால் காய்ப்பு அதிகரிக்கும். குரும்பை உதிர்வது நின்றுவிடும். பிடித்த பிஞ்சுகள் அனைத்தும் வளர்ச்சி பெற்று காய்க்கும். அதனால், நுண்ணூட்ட உரத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். 5 டன் உரம் இருப்பு உள்ளது. ஒரு கிலோ ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மரத்துக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை, 200 கிராம் உரம் என, ஆண்டுக்கு, இருமுறை இடலாம். தேவைப்படுவோர் வேளாண் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.