தென்னைக்கு நுண்ணுாட்ட உரம் :வேளாண்துறை அழைப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தென்னைக்கு நுண்ணுாட்ட உரம் :வேளாண்துறை அழைப்பு
Added : ஜன 22, 2022 | |
Advertisement
 

சூலூர்:தென்னைக்கு ஊட்டம் தரும் நுண்ணுாட்ட உரத்தை பெற்று பயனடைய வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.தென்னையில் அதிக மகசூல் பெற, நுண் ணூட்ட உரம் பயன்படுத்த வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. சுல்தான்பேட்டை வேளாண் அலுவலர் குருசாமி, உதவி அலுவலர் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:தென்னைக்கு நுண்ணூட்ட உரம் பயன்படுத்துவதால் காய்ப்பு அதிகரிக்கும். குரும்பை உதிர்வது நின்றுவிடும். பிடித்த பிஞ்சுகள் அனைத்தும் வளர்ச்சி பெற்று காய்க்கும். அதனால், நுண்ணூட்ட உரத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். 5 டன் உரம் இருப்பு உள்ளது. ஒரு கிலோ ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மரத்துக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை, 200 கிராம் உரம் என, ஆண்டுக்கு, இருமுறை இடலாம். தேவைப்படுவோர் வேளாண் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X