சூலூர்:கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் சோளப் பயிர்கள், சூலுார் மற்றும் சுல்தான் பேட்டை பகுதியில் பருவ மழை, கை கொடுத்ததன் காரணமாக இந்த ஆண்டு அதிகளவில் வளர்ச்சியடைந்துள்ளது.இதனால், அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக, ோளப்பயிர்கள் அறுவடை தீவிரமடைந்துள்ளது.விவசாயிகள் கூறுகையில்,' இந்தாண்டு எதிர்பார்த்ததை விட, சோளம் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக அறுவடை பணியில் தீவிரம் காட்டி வருகிறோம். இம்முறை கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை இருக்காது. பால் வரத்தும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.