சூலுார்:சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை வசூலிக்க, சிறப்பு மையங்களை சூலூர் பேரூராட்சி நிர்வாகம் துவங்கவுள்ளது.சூலூர் பேரூராட்சி நிர்வாகம், 2021--22 ஆண்டுக்கான சொத்து, தொழில் வரி, குடிநீர் மற்றும் உரிமைக்கட்டணம் உள்ளிட்டவைகளை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க சிறப்பு மையங்களை துவங்கவுள்ளது.வரும், 24ம் தேதி, 12, 14 வார்டுகளை சேர்ந்த மக்களுக்காக, அந்த வார்டில் உள்ள ரேஷன் கடை மற்றும் துணை சுகாதார நிலையத்தில் தற்காலிக வசூல் மையம் துவங்கவுள்ளது.வரும், 25ம் தேதி, 13வது வார்டில், எஸ்.கே.கே., நகர் ரேஷன் கடையிலும், 27ம் தேதி, நேரு நகர் விநாயகர் கோவில் அருகிலும் சிறப்பு மையம் திறக்கப்பட உள்ளது.28 ம்தேதி, 4 மற்றும், 12 வார்டுக்கு உட்பட்ட கலங்கல் ரோடு, திருமால் நகர் விநாயகர் கோவில் அருகிலும், 31ம் தேதி, 3வது வார்டுக்கு உட்பட்ட ஜி.கே.எஸ், நகர், ஆயுர்வேத கல்லூரி அருகிலும் சிறப்பு வரி வசூல் மையங்கள் துவக்கப்பட உள்ளன.வரும், 31 ம்தேதிக்குள் பொதுமக்கள், தொழில் நடத்துவோர், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி பயன் பெறலாம், என, சூலூர் பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.