மேட்டுப்பாளையம்:அரியலூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், படித்து வந்த பிளஸ் 2 மாணவி, தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவியின் இறப்புக்கு காரணமான தனியார் பள்ளி மீது, நடவடிக்கை எடுக்க கோரியும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரியும், மேட்டுப்பாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, இணை செயலாளர் குணசேகரன், மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.