பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு ரயில்வே தண்டவாளம் அருகே பார்சல் வேன் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய இரண்டு பேர் மூட்டை, மூட்டையாக கழிவுகளை கீழே தூக்கி வீசினர்.இத்தகவல் தெரிந்ததும், அசோகபுரம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சுதாகர், ஊராட்சி துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கவுன்சிலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்கள் உதவியுடன், கழிவு ஏற்றி வந்த வேனை சிறைப்பிடித்தனர்.விசாரணையில், கண்ணப்ப நகர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பலவிதமான கழிவுகள் என, தெரியவந்தது.இது குறித்து, அசோகபுரம் ஊராட்சி செயலாளர் லீலா கிருஷ்ணன், துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.