சூலூர்:நீலம்பூர் பை - பாஸ் ரோட்டில் லாரி மோதி, தொழிலாளி பலியானார்.கோவை, கஞ்சிக்கோனாம்பாளையத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் காளிதாஸ்,27. இவர், பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு, பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.நீலம்பூர் பை பாஸ் ரோட்டில், பட்டணம் பிரிவு அருகே சென்றபோது, அவ்வழியே சென்ற டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.