மேட்டுப்பாளையம்:காரமடையில், சொர்க்க வாசல் வீதியில் தனியார் நகைக்கடை உள்ளது.காரமடை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மாரியப்பன், கடைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் கொரோனா விதிமுறைகளை மதிக்காமல், மாஸ்க் அணியாமல் இருந்ததை போட்டோ எடுத்துள்ளார். மேலும் கடையின் உரிமையாளரிடம் அபராதம் செலுத்துமாறு, ரசீதை கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கடையின் உரிமையாளர், துப்புரவு ஆய்வாளரை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.மாரியப்பன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காரமடை போலீசார் கடையின் உரிமையாளர் முகமது தவுபிக்கை, 28, கைது செய்து விசாரிக்கின்றனர்.