வில்லியனுார் : மங்கலம் தொகுதியில் சாலை மேம்படுத்தும் பணியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ. 20 லட்சம் செலவில் மங்கலம் தொகுதியில், அரியூர் குமரன் நகர், பங்கூர் வி.ஐ.பி., கார்டன், சாத்தமங்கலம் தனலட்சுமி நகர்,
கீழ் சாத்தமங்கலம் டாக்டர் அம்பேக்கர் நகர் ஆகிய இடங்களில் செம்மண் கிராவல் மூலம் சாலை மேம்படுத்தும் பணியும், திருக்காஞ்சி கழிவு நீர் சுத்தி கரிப்பு உறிஞ்சும் குழி அமைப் பதற்கான பூஜை நடந்தது.அமைச்சர்கள் சாய் சரவணன்குமார், தேனீ ஜெயக்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்குமார், உதவி பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் ராமநாதன், தன்ராஜ், ஆய்வாளர் ரங்கராஜ், கிராம திட்ட ஊழியர்கள் மகாதேவி, திருமால், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.