விழுப்புரம் : புதுச்சேரி மாநிலம், கொத்தபுரிநத்தத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் கார்த்திகேயன், 26; இவர், மீது விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது.இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில், கார்த்திகேயன் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.