புதுச்சேரி : நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பம் வழங்க வேண்டி கட்டட தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், கட்டடக்கலை சங்க பொதுச் செயலாளர் சந்திரசேகரன், தலைவர் விசுவநாதன், பொருளாளர் ஞானவேல் மற்றும் நிர்வாககள், தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்காவை சந்தித்து அளித்த மனு:கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியானவர்களை உறுப்பினராக சேர்த்திட வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்க, உறுப்பினர் படிவம் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.