குடிநீருடன் கழிவுநீர்ராஜபாளையம் தோப்புப்பட்டியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும் எங்கள் பகுதியில் சாக்கடை அள்ளவில்லை.சிவக்குமார், ராஜபாளையம்.ஆய்வு செய்து நடவடிக்கைசம்மந்தப்பட்ட இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. கழிவுநீர் கலப்பு பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.ராமலிங்கம், நகராட்சி பொறியாளர், ராஜபாளையம்.பழுதடைந்த தண்ணீர் தொட்டிசிவகாசி நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சுகாதார வளாகத்தின் தொட்டி பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாகிறது. புதிய தொட்டி வந்தும் தற்போது வரை சரி செய்யப்படாமல் உள்ளது.சுப்பிரமணியன், ராஜபாளையம்.விரைவில் சரி செய்யப்படும்விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்தேவராஜ், ஊராட்சி தலைவர், நாரணாபுரம்.ஆமைவேகத்தில் பணிகள்ராஜபாளையம் பெரிய கடை பஜார் பகுதியில் பல மாதங்களாக கட்டப்பட்டு வரும் மகளிர் சுகாதார வளாகம் கட்டுமான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.மல்லிகா, ராஜபாளையம்.நடவடிக்கை எடுக்கப்படும்பணிகள் வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சுந்தராம்பாள், நகராட்சி கமிஷனர், ராஜபாளையம்.குப்பையால் அவதிவிருதுநகர் அருப்புக்கோட்டை பாலம் கீழ்ப்பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.கர்ணன், விருதுநகர்.அகற்ற நடவடிக்கைகுப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.சையது முஸ்தபா கமால், நகராட்சி கமிஷனர், விருதுநகர்.ஆக்கிரமிப்புகளை அகற்றுங்ககாரியாபட்டி பேரூராட்சியில் ரூ.2 கோடிக்கு சாக்கடை, பேவர் பிளாக் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராதா, காரியாபட்டி.நடவடிக்கை எடுக்கப்படும்ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.மணிகண்டன், செயல் அலுவலர், காரியாபட்டி.தெருவிளக்கு வசதி இல்லைவிருதுநகர் லெட்சுமி நகரில் போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவில் பணி முடிந்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.ராஜலெட்சுமி, விருதுநகர்.வசதி செய்து தரப்படும்நிதி வந்ததும் தெருவிளக்கு வசதி செய்து தரப்படும்.கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர், விருதுநகர்.கழிவுநீர் தேக்கம்சிவகாசி போலீஸ் குடியிருப்பு முன்புறம் உள்ள ஓடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. துார்வார வேண்டும்.சுகுமார், சிவகாசி.துார்வார நடவடிக்கைஓடையை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர், சிவகாசி.நாசமடையும் தெப்பம்சாத்துார் சிவன் கோயில் தெப்பத்தில் குப்பை, தெர்மாக்கோல் அட்டைகள் மிதக்கின்றன. இவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.கிருஷ்ணன், சாத்துார்.குப்பை அப்புறப்படுத்தப்படும்தண்ணீர் நிரப்புவதற்கு முன்பு தெப்பத்தில் இருந்த குப்பையை அகற்றினோம். தற்போது யாரும் மனு தரவில்லை. மனு கொடுத்தால் சுகாதார அலுவலர் முன்னிலையில் குப்பை அப்புறப்படுத்தப்படும்.நித்யா, நகராட்சி கமிஷனர், சாத்துார்.நிழற்குடை தேவைசாத்துார் கோவில்பட்டி ரோட்டில் உள்ள பெத்துரெட்டியபட்டி விலகு ரோட்டில் நின்று பயணிகள் பஸ் ஏறி செல்கின்றன. நிழற்குடை இல்லை. ரோட்டோரம் காத்திருப்போர் பாதிப்பை சந்திக்கின்றனர்.தாயம்மாள், பெத்து ரெட்டியபட்டி.நடவடிக்கை எடுக்கப்படும்நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி பெற்று பயணிகள் நிழற்குடை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.முனியம்மாள், ஊராட்சி தலைவர், பெத்துரெட்டியபட்டி.