ராமநாதபுரம்-ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதியில் காய்கறி, பழங்கள் விற்பனை, உட்பகுதியில், ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட பிற வாகனங்கள் ஆக்கிரமிப்பால் பஸ்களை நிறுத்தும்போதும், வெளியே புறப்படும் போதும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, கன்னியாகுமரி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் 5ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலைமையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ்நிறுத்தும் பகுதிகளில் கண்டபடி டூவீலர்களை நிறுத்துகின்றனர். மேலும் பஸ் நுழைவு, வெளியேறும் பகுதியில் ஆபத்தான முறையில் காய்கறி, பழங்கள் விற்கின்றனர்.மேலும் அத்துமீறி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் ஆட்டோக்கள், கார்கள் வந்து செல்கின்றன. பஸ்கள் நிறுத்தும்போதும், புறப்படும் போதும் தாமதம், இடையூறு ஏற்படுகிறது. ஆகையால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ்கள் மட்டும் வந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அத்துமீறி உள்ளே வரும் பிறவாகனங்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சிநிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.