திருப்புல்லாணி,-திருப்புல்லாணி வட்டார வேளாண்துறை சார்பில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில், நெற்பயிரில் வேளாண் சுற்றுச்சூழல் மேலாண்மை,' என்ற தலைப்பில் காஞ்சிரங்குடியில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது.நெற்பயிரில் விதைப்பு முதல் அறுவடைக்கு பின் தானியங்களை சேமித்தல் வரையிலான தொழில் நுட்பங்கள் ஆறு வகுப்புகளாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நடந்த 4வது கட்ட பயிற்சியில் காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி துவக்க வைத்தார்.வேளாண் துணை இயக்குனர் ேஷக் அப்துல்லா பேசுகையில், நெல் அறுவடைக்கு பின் இரண்டாம் போகமாக அறுவடை செய்த நெல் வயல்களில் பயறு வகைகள் சாகுபடி செய்வதன் அவசியம் குறித்து பேசினார். பின், பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு உளுந்து விதைகளை வழங்கினார்.குயவன்குடி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன், திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால் உட்பட பலர் பேசினர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் பானுமதி, உதவி தொழில் நுட்ப மேலாளர் மாரீஸ்வரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.