முதுகுளத்தூர்-முதுகுளத்தூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு வட்டார தலைவர் காளிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டாரச் செயலாளர் பிரிட்டோ முன்னிலை வகித்தார். கொரோனா காலத்தில் நோய் பரவலை தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் நேரடி பயிற்சிகளை தவிர்க்கவும், ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் உத்தரவை ரத்து செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார் .