தேவிபட்டினம்-கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழக அரசு வாரம் தோறும், வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.நேற்று முதல் ஞாயிறு வரை தடை உத்தரவு உள்ளதால், தேவிப்பட்டினம் நவபாஷாணம், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில், உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருந்தால், அப்பகுதி பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.