ராமேஸ்வரம் கோயிலில் விவேகானந்தர் கல்வெட்டு சேதம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ராமேஸ்வரம் கோயிலில் விவேகானந்தர் கல்வெட்டு சேதம்
Added : ஜன 22, 2022 | |
Advertisement
 

ராமேஸ்வரம்,-125 ஆண்டுக்கு முன் ராமேஸ்வரம் கோயிலில் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவின் கல்வெட்டு சேதமடைந்துள்ளது.சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிய பின் கப்பல் மூலம் 26.1.1897ல் ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினார். அவரை ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வரவேற்று ராமேஸ்வரம் அழைத்து சென்றார். மறுநாள் (27.1.1897) ராமேஸ்வரம் கோயிலில் விவேகானந்தர் 'உண்மையான வழிபாடு' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.இவரது சொற்பொழிவு மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. இதன் நினைவாக அவரது பேச்சை கல்வெட்டில் பதித்து, கோயில் கிழக்கு ராஜகோபுரம் நுழைவு வாயில் இருபுறமும் வைத்துள்ளனர். பல ஆண்டுக்கு முன் வைத்த இக்கல்வெட்டை கோயில் நிர்வாகம் பராமரிக்காததால், கல்வெட்டை சுற்றியுள்ள சிமென்ட் பூச்சும், கல்வெட்டின் எழுத்துகளும் சேதமடைந்துள்ளது. இனிவரும் நாளில் கல்வெட்டு கீழே விழுந்து உடைய வாய்ப்பு உள்ளது.எனவே விவேகானந்தரின் ஆன்மிக வரலாற்று சொற்பொழிவு கல்வெட்டை பாதுகாத்திட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X