ரெட்டியார்சத்திரம்--டி.புதுப்பட்டி ஊருணி பராமரிப்பின்றி பாலிதீன் கழிவுகளை குவித்து எரிக்கின்றனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.புதுப்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ஊருணி உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்து போய், நீர் வரத்து வழித்தடங்கள் தடைபட்டுள்ளன.கரைகளில் ஊராட்சி நிர்வாகமே பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை குவித்து எரிக்கிறது. சுற்றியுள்ள பல நீர்த்தேக்கம், கண்மாய்கள் சமீபத்திய மழையால் நிரம்பியுள்ளன. ஆனால் இந்த ஊருணியில் தண்ணீர் தேங்காத அவலம் நீடிக்கிறது.விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பெருமாள் கூறுகையில், "திடக்கழிவு மேலாண்மையில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. கண்ட இடங்களில் குப்பையை குவித்து எரிக்கின்றனர். ஊருணியை பராமரித்து மேம்படுத்த உள்ளாட்சி நிர்வாகமோ, அதிகாரிகளோ முன்வரவில்லை. மாவட்ட நிர்வாகம் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.