திண்டுக்கல்-திண்டுக்கல்லில் பொதுத்தேர்வு மாணவர்களின் பெயர் பட்டியல் சமர்ப்பிக்க ஜன.31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பதிவு எண்கள் தயார் செய்வதற்கு உரிய விபரங்களை பதிவு செய்ய ஜன.19 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் இணைய பிரச்னை, பொங்கல் விடுமுறை போன்ற காரணங்களால் பல உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு பணிகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் விபரங்களை பதிவு செய்யவும், பிழை திருத்தம் செய்யவும், தேர்வு கட்டணம் செலுத்தவும் வரும் ஜன.31 ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.