பழநி---பாப்பம்பட்டியில் வி.சி.க., கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பழநி டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பழநி பாப்பம்பட்டியில் சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சிக் கொடிக் கம்பத்தை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தினர். இதுகுறித்து பழநி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.கொடிக்கம்பத்தை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் வைத்தனர். நேற்று காலையில் மீண்டும் கொடிகம்பத்தை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். எனவே பழநி டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தின் முன் மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர், செய்தி தொடர்பாளர் பொதினிவளவன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., சத்யராஜ் பேச்சுவார்த்தை நடத்தியபின் கலைந்து சென்றனர்.