கம்பம்,- -கம்பம் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க-வில் கடும் போட்டி நிலவுகிறது. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும் என நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் தலைவர் பதவிக்கு போட்டா போட்டியிடுகின்றனர். கம்பம் நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை காங்கிரசை சேர்ந்த ஓ.ராமசாமி, திருமலை வரதராசன், தி.மு.க.வை சேர்ந்த பாஸ்கரன், இளங்கோவன், அம்பிகா. அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜாமணி, சிவக்குமார் நகராட்சி தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். 2011 க்கு பின் தேர்தல் நடத்தவில்லை. தற்போது தேர்தலில் போட்டியிட கம்பம் வடக்கு பொறுப்பாளர் துரை நெப்போலியன், தெற்கு பொறுப்பாளர் செல்வக்குமார், பொறுப்புக்குழு வீரபாண்டியன் என தி.மு.க.வில் போட்டி நீள்கிறது. இதில் யார் வாய்ப்பை பெறப் போகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்களின் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.