கம்பம்,-- -கம்பம் அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகளாக பழைய கருவியை பயன்படுத்துவதால் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் அதிக பிரசவங்கள் நடக்கும் அரசு மருத்துவமனைகளில் கம்பம் முதலிடத்தில் உள்ளது. இங்கு தினமும் சிசேரியன்,பொது அறுவை சிகிச்சைகள் அதிகம் நடக்கிறது. காசநோய்க்கு மார்பு எக்ஸ்ரே, விபத்து காயம் பற்றி அறிய தினமும் 10 க்கும் மேற்பட்ட எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படுகிறது. இங்குள்ள எக்ஸ்ரே கருவி 20 ஆண்டுகளை கடந்துள்ளது. எக்ஸ்ரே கருவியின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளை கடந்தால் படங்கள் தெளிவாக தெரியாது என்கின்றனர் டெக்னீசியன்கள். ஆனால் 20 ஆண்டுகளாக இங்கு எக்ஸ்ரே கருவி மாற்றாமல் உள்ளது. டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி கேட்டு மருத்துவமனை நிர்வாகம் அரசுக்கு கடிதம் எழுதியும் இதுவரை பலனில்லை.மருத்துவ அலுவலர் ஜெ.பொன்னரசன் கூறுகையில், 'டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி கேட்டுள்ளோம். ஆனால் மொபைல் எக்ஸ்ரே கருவி உள்ளது. எனவே, எக்ஸ்ரே எடுப்பதில் பிரச்னை இல்லை,' என்றார்.