தேனி-தேனி கலெக்டர் அலுவலகம் முன், மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.424, கொசு ஒழிப்பு மஸ்துார் பணியாளர்களுக்கு ரூ.290 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெயன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயபாண்டி, சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முருகன், நிர்வாகிகள் பொம்மையன், ரஞ்சித்குமார், பிரியா, பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.கூடலுார் நகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு பிடிக்கப்பட்ட பி.எப்., தொகையை அலுவலகத்தில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.