போடி- -கூழையனூரில் நெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகுறித்து குள்ளப்புரம் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.நடவு செய்த நெற்பயிரில் இலை சுருட்டுப் புழுக்கள் தாக்கம் உள்ளது. பயிருக்கு ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குறையும். இதனை கட்டுப்படுத்தும் விதமாக இலை நுனிகள் வெட்டுதல், சூரிய ஒளி விளக்கு பொறி அமைத்தல், மஞ்சள் ஒட்டும் இனக்கவர்ச்சிப் பொறி, பிவேரியா பேசியானாவை கொண்டு விதை நேர்த்தி செய்தல், நாற்று நடுதல், தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடுதல், மீனை வயலில் வளர்த்தல் மூலம் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் தக்ஷியா, காயத்ரி, கிருத்திகா, பிரியதர்ஷினி, சுபா, யோகேஸ்வரி விளக்கினர்.