ஆண்டிபட்டி,--ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டியில் கிணற்றில் விழுந்த கடமானை ஆண்டிபட்டி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை கண்டமனூர் வனச்சரக பகுதியில் இருந்து வழிதவறி வந்த கடமான் ஜி.உசிலம்பட்டி சுந்தர்ராஜ் என்பவரின் 80 அடி ஆழம் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலில் ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் கடமானை உயிருடன் மீட்டு கண்டமனூர் வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.