பெரியகுளம்-பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடிப்படை வசதி மேம்படுத்த ஆய்வு நடந்தது. பெரியகுளம் கண்மாய் அருகே உள்ள விளையாட்டு மைதானம் 2 ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்டது. இந்த மைதானத்தில்,காலை,மாலையில் மக்கள் ஏராளமானோர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இங்கு பள்ளி மாணவர்களும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.ஆய்வு: இந்த மைதானத்தில் ஆண், பெண்களுக்கு சுகாதார வளாகம், கண்காணிப்பு கேமிரா,உயர் கோபுர மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர சரவணகுமார் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர் புனிதன், தலைமை ஆசிரியர் கோபிநாத்,பொதுப்பணி துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.