வாடிப்பட்டி-வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பொன் பெருமாள் கண்மாயில் முறையாக நடக்காத குடிமராமத்து பணியால் மேற்கு மடை வழியாக நீர் வீணாகிறது.இக்கண்மாயில் கிழக்கு, மேற்கு ஆகிய மடைகள், ஒரு மறுகால் உள்ளது. சிறுமலை நீர்வரத்து ஓடையால் 55 ஏக்கர் கண்மாய் 80 சதவீதம் நிரம்பியுள்ளது. 2017ல் ரூ.36 லட்சத்திற்கு இக்கண்மாயில் மராமத்து பணிகள் நடந்தன. பாசன வசதி பெறும் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி விட்டன. பேரூராட்சி பகுதி குடிநீர் தேவைக்கு போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மடை வழியாக 10 நாட்களாக வெளியேறும் நீரால் நெல் நடவு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியறும் நீர் காலி மனைகளில் தேங்கியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மடையை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.