திருப்பரங்குன்றம் --ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்தின்போது எடுக்கப்பட்ட ஒழுங்க நடவடிக்கைகளை கைவிடுவது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம் கிளை சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டார தலைவர் முருகன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் விக்டர் சர்மா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கண்மணி, ஜோஸ்பின் நிர்மலா, முன்னாள் பொருளாளர் ஜெய்சன் டேனியல் மோசஸ் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் வினோத்குமார் வரவேற்றார். வட்டார செயலாளர் மஞ்சுளா கோரிக்கைகளை விளக்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராமதாஸ், தெற்கு வட்டார கிளை செயலாளர் பழனிவேல் பேசினர். பொருளாளர் வளர்மதி நன்றி கூறினார்.