திருநகர் -திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர் ஆரிஷ் ஸ்ரீகுமார். இவர் நேபாள் யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் சார்பில் நேபாளில் நடந்த இன்டோ-நேபாள் உலக சிலம்பம் போட்டியில் பங்கேற்றார். 50-55 கிலோ எடை பிரிவில் இவர் தங்கப்பதக்கம் வென்றார். அவரை கல்லுாரி தாளாளர் நோவா, பேராசிரியர்கள் ஜேம்ஸ், செல்வரதி, பொன்மணி, வருணப்பிரியா உள்ளிட்டோர் பாராட்டினர்.