மதுரை -மதுரை திருநகரில் மாவட்ட அளவிலான 13 வயதிற்குட்பட்டோருக்கான நால்வர் கால்பந்து போட்டி நடந்தது.இதில் மதுரை ஆர்.எல்.எப்.ஏ., அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் திருமங்கலம் வேல்ஸ் எப்.சி., அணியுடன் 4-1 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. அணியினரை தலைமை பயிற்சியாளர் சுந்தர், பயிற்சியாளர்கள் வீரமணி, முத்தையா உள்ளிட்டோர் பாராட்டினர்.