மேலுார் -மேலுார் விநாயகபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை குழு செயலாளர் மெர்ஸி ஜெயராணி தலைமையில் தேங்காய் ஏலம் நடந்தது.ஐந்து விவசாயிகளின் 12,075 காய்கள் ஏலம் விடப்பட்டன. 4 வணிகர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் ரூ.86,994 வணிகர்களிடம் பெறப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஏலம் தொடர்பான விவரங்களுக்கு விவசாயிகள் மேற்பார்வையாளர் ஆர்த்தியை 96290 79588 ல் தொடர்பு கொள்ளலாம்.